பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பால காண்டப் 'நிறைபரம் சொரிந்து வங்கம் நெடுமுதுகு ஆற்றும் நெய்தல்' (19) என்பது பாடல் பகுதி. முதுகு ஆற்றும் என்னும் தொடர் மிக்க இலக்கிய இன்பத்தைத் தருகிறது. விருந்தினர் உண்ண: உழவர்கள் நெல்லை அறுத்து அடித்துத் தூற்றிப் புடைத்து, வயலிலேயே ஏழையர் பலர்க்கும் ஓரளவு ஈந்து, மிகுதியை விருந்தினர் உண்ணுவதற்காக வீட்டிற்குக் கொண்டு வருவார்களாம். வழிமறையும்படி பலவண்டிகளில் நிறைத்துக் கொண்டுவருவார்களாம். மண் மடந்தை சுமை தாங்காமல் நெளியும்படி நிறைத்த நெல்லைக் கொணர்வார் களாம். வறியவர்க்கு உதவி, மிக்க விருந்து உண மனையின் 2-lilt i LiIT SUT நெறிகளும் புதையப் பண்டி கிறைத்து மண் நெளிய ஊர்வார்?? (20) விருந்தினர் உண்ண வீட்டிற்குக் கொணர்வர் என்பது, 'இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ (81) என்னும் குறளை நினைவுகூரச் செய்கிறது. கொன்றைக் குழல் : புல்லாங் குழல் என்பது, புல் மர இனமாகிய மூங்கிலின் சிறு கோலில் துளை போட்டுச் செய்யப் பட்டது. இந்தக் குழலையே பெரும்பாலோர் அறிவர். கொன்றை மரத்தின் காய் நீளமாக இருக்கும். அதிலும் துளை போட்டு ஆயர்கள் குழல் செய்து இசைப்பர். இந்தக் குழல்களின் இசை கேட்டு முன்றிலில் கன்றுகள் உறங்குமாம். பாடல் பகுதி: