பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல். 29

54.-அவை, இவை என்னும் வை, ஈற்றுச் சுட்டுப் பெயர்களும் எவை என்னும் வினுப்பெயரும் உருபேற்றல் எவ்வாறுகும்:

அவை இவை என்னும் சுட்டுப் பெயர் களும் எவை என்னும் வினப்பெயரும் உரு பேற்ருல் இறுதியில் உள்ள ஐகெட்டு அவ், இவ், எவ் என நின்று அற்றுச்சாரியை பெறும்.

(உம்)அவை= છ =(அவ்+அற்று+ஐ)=அவற்றை இவை= ஐ=(இவ்+அற்று + ஐ)=இவற்றை எவை=ஐ =(எவ்-அற்று+ஐ)=எவற்றை

55.-ஒருபெயருக்கு எப்படிச் சொல்லிலக்கணம் கூறவேண்டும்?

ஒரு பெயர்ச் சொல்லுக்குச் சொல்லிலக் கணம் கூறினல் திணை, பால், இடம், எண், வேற்றுமை ஆகிய இவற்றையும், அதன் முடி

பையும் எடுத்துக் காட்டவேண்டும்.

கண்ணன். பள்ளிக்கூடத்திற்கு வந்தான்்

இதில் கண்ணன் உயர்திணை, ஆண்பால், படர்க்கை,

ஒருமை. வந்தான்் என்னும் வினைப்பயனிலைக்கு எழுவா யாக கின்றது.

பயிற்சி-9.

1. தன்மை ஒருமைப் பெயர் ஒன்றெழுதி ஒரு வேற்றுமை உருபைக் கூட்டி, அது அடையும் திரிபுப்படி எழுதிக் காட்டுக. .