பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதில் வக்தான்் என்னும் வினைச்சொல் உயர்தினை யையும், ஆண்பாலையும். படர்க்கை இடத்தையும் தொழில் கடந்து விட்டதையும் காட்டியது, அது வேற்றுமை உருபை ஏற்கவில்லை. 58.-காலமானது யாது? அது எத்தனை வகைப்படும்?

காலமாவது ஒரு பொருளின் தொழில் நடைபெறுங் காலம். அது. 1, இறந்த காலம், 2. நிகழ் காலம், 3. எதிர் காலம் என மூவகைப்படும்.

குறிப்பு:-வினைச் சொற்களில் காலத்தைக் காட்டுவன இடையில் கிற்கும். சில எழுத்துக்கள். அவற்றிற்கு இடை நிலைகள் என்று பெயர். 59.-இறந்த காலமாவது யாது?

ஒரு பொருளின் தொழில் முன்னமே நடந்துவிட்ட காலம் இறந்த காலமாம்.

(உ-ம்) படித்தான்், உண்டான், சென்ருன். 60. - இறந்த காலங் காட்டும் இடை நிலைகள் எவை?

த்-ட்-ற்-இன் என்பவை இறந்தகாலங் காட் டும் இடை நிலைகளாம்.

(உ-ம்) செய்தான்் செய் + த் - ஆன தின்ருன் தின் - ற் - ஆன் உண்டான் உண் + ட் + ஆன்

ஓடினன் ஒடு + இன் - ஆன்