பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பால போத இலக்கணம்.

91.-நிகழ்காலமாவது யாது?

ஒரு பொருளின் தொழில் முடிவு பெருமல் நடந்துகொண்டிருக்குங் காலம் நிகழ்காலமாம்.

(உ-ம்) செய்கிருன்-உண்கின்ருன்-தின்னுகின்றன்.

62-நிகழ்காலங் காட்டும் இடை நிலைகள் crລວ?

கிறு-கின்று-ஆநின்று என்னும் மூன்றும்

நிகழ்கால இடைநிலைகளாம்.

(உ-ம்) செய்கிருன் ... செய் - கிற, + ஆன் உண்கின்ருன் ... உண் - கின்று + ஆன்

தின்னுகின்றன் .... சின் + ஆகின்று + ஆன்

68.-எதிர் காலமாவது யாது?

ஒரு பொருளில் தொழில் இனி நடக்கப்

போகிற காலம் எதிர்காலமாம்.

(உ-ம்) படிப்பான்-செய்வான்.

64. - எதிர் காலங் காட்டும் இடை நிலைகள் எவை?

ப்-வ் என்னும் இரண்டும் எதிர்காலங்

காட்டும் இடைநிலைகளாம்.

(உ-ம்) தின்பான் ... தின் + ப் - ஆன்

செய்வான் ... செய் + வ் - ஆன்