பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல். 4.i.

83 -வினை யெச்சமாவது யாது?

விகுதியால் பால் முதலியவற்றைக் காட்டா மல் வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினை யெச்சமாம். முடியுஞ்சொல்லாகிய வினைச்சொல் (எஞ்சியிருப்பது) குறைந்திருப்பது வினை யெச்சம்.

84.-அது எத்தனை வகைப்படும்?

அது (1) இறந்தகால வினையெச்சம் (2) நிகழ்கால வினையெச்சம் (3) எதிர்கால வினையெச் சம் (4) எதிர்மறை வினையெச்சம் என நான்கு வகைப்படும்.

85.-இறந்தகால வினையெச்சமாவது யாது?

ஒரு வினைப்பகுதி உ-இ-ய் என்னும் விகுதி களுள் எதாவது ஒன்றை ஈற்றில் பெற்று வரு வது, இறந்தகால வினையெச்சம்.

உண்டு ----- (வந்தான்்) - - - - (ഉ) இடி - - - (வந்தான்்) - - - (இ) போய் ---- (வந்தான்்) * - - (ய்)

86.--நிகழ்கால வினையெச்சமாவது யாது?

ஒரு வினைப்பகுதி அ என்னும் விகுதியை இறுதியிலே பெற்று வருவது, நிகழ்கால வினை

யெச்சமாம்.

சூரியன் உதிக்க (வந்தான்்) * * * (의)