பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பால போத இலக்கணம்.

87.-எதிர்கால வினையெச்சமாவது யாது.

ஒரு வினைப்பகுதி இன், ஆல், கால் என்

லும் விகுதிகளில் ஏதாவ தொன்றை ஈற்றிலே பெற்று வருவது எதிர்கால வினையெச்சமாம்

உண்ணின் ... (வருவான்) ... (இன்) உண்டால் ... (வருவான்) ... (ஆல்) உண்டக்கால் .... (வருவான்) ... (கால்)

88.-எதிர்மறை வினையெச்சமாவது யாது?

ஒரு வினைப்பகுதி, ஈற்றலே உ, மல், மே என்னும் விகுதிகளைப் பெற்று இடையில் ஆ என்னும் எதிர்மறை இடை நிலையோடு வருவது எதிர்மறை வினையெச்சமாம்.

(உ.ம்) படியாது (இருந்தான்்) படி (ஆ)-(து)

படியாமல் (இருந்தான்்) , (ஆ)-(மல்) படியாமே (போனுன்) ; (ஆ)-(மே)

பயிற்சி-12.

1. அடியில் வரும் வாக்கியங்களில் தன்வினை பிறவினை

படர்க்கை வினைமுற்றை எடுத்துக் காட்டு. (1) அரசன் கோயிலைக் கட்டுவித்தான்். (2) தச்சன் மரத்தை வெட்டினன். (3) கண்ணன் ஊருக்குப் போனன்.

2. (1) பெயரெச்ச விகுதிகள் எவை?

(2) வினையெச்ச விகுதிகள் எவை?