பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பால போத இலக்கணம்.

(உ.ம்) மணி பெரிது=மணிபேரிது

கேல் + வயல்=கெல்வயல்.

97.--விகாரப்புணர்ச்சியாவது என்ன? அது எத்தனை?

நிலைமொழியின் கடையெழுத்தும் வருமொ ழியின் முதலெழுத்தும் ஒன்றுபடச் சேரும் போது புதிதாக அங்கு ஒரெழுத்துத்தோன்றுத லும், நின்ற எழுத்து மற்றொரு எழுத்தாகத் திரிதலும், உள்ள எழுத்துக் கெடுதலுமாம். ஆகவே அவ்விகாரம்:

1. தோன்றல்-(எழுத்தாவது சாரியையாவது

தோன்றல்) 2. திரிதல்-(கிலேமொழியிருவது வருமொழி முதலா வது இரண்டுமாவது வேறுபடுதல்) 3. கெடுதல்-(எழுத்துக்கள் கெடுதல்) என மூன்று வகைப்படும்.

குறிப்பு-நிலைமொழி வருமொழிகள் சேரும்போது இவ்விகாரங்களுள் ஒன்றை யேனும், பலவற்றை யேனும் அவை அடையும். (உ.ம்) வாழை+காய்=வாழைக்காய் (இதில் க்-எழுத்துத்

தோன்றல்) புளி + பழம்=புளியம்பழம் (இதில் அம் சாரியை

தோன்றல்) மண் + குடம்=மட்குடம் (இதில் ணகரம் டகாமா

கத்திரிதல்) மரம் + வேர்=மரவேர் (இதில் ம் கெடுதல்.)