பக்கம்:பாலர் பாடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பையன்: கிளியே, கிளியே, உன்னுடன்
         கிளம்பி வரவா நானுமே?

கிளி: இறக்கை உனக்கு இல்லையே!
         எப்ப டித்தான் பறப்பதோ?

பையன்: இறக்கை நீதான் கொண்டுவா.
         இன்றே சேர்ந்து பறக்கலாம்.

கிளி: பழங்கள் தாமே தின்னலாம்.
         பட்ச ணங்கள் இல்லையே!

பையன்: பட்ச ணங்கள் வாங்கவே
         பணமும் கொண்டு வருவேனே.

கிளி: பணத்தை எந்த இடத்திலே
         பாது காத்து வைப்பதோ?

பையன்: பணத்தைச் சிறகி னுள்ளேயே
         பாது காத்து வைப்பேனே.

கிளி: பறக்கும் போது ஐயையோ,
         பணம் விழுந்து போகுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/14&oldid=1314725" இலிருந்து மீள்விக்கப்பட்டது