இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
'குடுகு' டென்று குமரனே
குதித்து மலையில் ஏறினான்.
மலையைக் கண்டு பிள்ளையார்
மலைத்துத் தொந்தி தடவினார்.
'களைப்பு' அதிகம் ஆனது.
காலும் மெத்த வலிக்குது.
தம்பி நீபோய் வந்திடு.
தங்கி இருக்கி றே'னென
அரச மரத்து அடியிலே
அமர்ந்தார், தொந்திப் பிள்ளையார்.
22