இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காண வில்லை அண்ணனை,
கண்ணுக் கெட்டும் வரையிலும்.
மலையின் மேலே நின்றிடின்
மரத்தின் கீழே தெரியுமோ?
பார்த்துப் பார்த்து உச்சியில்
பார்த்துக் கந்தன் நிற்கிறான்.
காத்துக் காத்துக் கணபதி
காற்று வாங்கும் காட்சி பார்!