இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஸ்டேஷனி லெல்லாம் நிற்குதுபார்.
சிகப்புக் கொடிக்கே அஞ்சுதுபார்.
மலையைக் குடைந்துமே செல்லுதுபார்.
மையிருள் அதிலுமே ஓடுதுபார்.
பாலம் கடந்தது செல்லுதுபார்.
'பட, பட' 'கட, கட' என்கு துபார்.
பட்டண மாமா கடிதமெலாம்
பையிலே தாக்கி வருகுதுபார்.
காசைக் கரியுமே ஆக்காமல்,
கரியைப் புகையாய் விடுவதுபார்.
26