இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எண்ண எண்ணத் தித்திக்கும் மிட்டாய்;
எச்சில் ஊறச் செய்யும் மிட்டாய்;
அண்ணன், தம்பி, தங்கை யோடு,
அப்பா கூடத் தின்னும் மிட்டாய்.
பல்லும், நாக்கும் வர்ணந் தீட்டிப்
பலவி தத்தில் காட்டும் மிட்டாய்;
பல்லில் லாத பாட்டி கூடப்
பையப் பையச் சப்பும் மிட்டாய்.
குழந்தை யெல்லாம் வாங்கும் மிட்டாய்;
கூடிக் கூடித் தின்னும் மிட்டாய்;
அழுத பிள்ளை வாயைமூட
அம்மா வுக்கு உதவும் மிட்டாய்.
28