இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
‘பூம்-பூம்' என்ற சப்தமுடன்
போகுது மோட்டார் பார், பார், பார்.
'ஜாம்-ஜாம்' என்றே அதிலேறிச்
சவாரி செய்வோம் வா, வா, வா.
அப்பா காசு தந்திடுவார்.
அதனில் மோட்டார் வாங்கிடலாம்.
சுப்பா, நீயும் தோழர்களும்
சொகுசாய் ஏறிச் சென்றிடலாம்.
29