இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சொட்டித் துண்டைக் கயிற்றிலே,
கட்டி விட்டுக் கையையும்
கட்டிப் போட்டால், வேகமாய்
எட்டி, எட்டித் தின்னுவோம்.
ஒன்று, இரண்டு, மூன்று,உம்
ஒடு வீர்கள் விரைவிலே’
என்று ஒருவர் சொல்லுவார்.
எடுத்து விடுவோம், ஒட்டமே.
வட்ட மான கோட்டுக்குள்
வளைந்து நாவகள் ஒடுவோம்.
கட்டப் பட்ட கண்ணுடன்
கண்டு பிடிப்பான், ஒருவனே
42