உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

II
பால்பர் அறிக்கை

ரோப்பிய மகாயுத்தம் முடிந்ததும், நேசக் கட்சியினர் விருப்பப்படியே வார்சேல் சமாதான உடன்படிக்கை தயாரிக்கப்பட்டதென்பதும், இந்தக் காலத்திலேயே சர்வதேச சங்கம் சிருஷ்டிக்கப் பட்டதென்பதும் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதற்குப் பிறகு, தோல்வியடைந்து போனதாகக் கருதப் பட்ட ஜெர்மனி, துருக்கி முதலிய நாடுகளின் ஆதிக்கத்திலிருந்த குடியேற்ற நாடுகளை, நேச வல்லரசுகள் தங்கள் தங்கள் நாடுகளுடன், தாங்களே சேர்த்துக் கொள்ளாமல், சர்வதேச சங்கத்தின் மேற்பார்வையில் விடுவதென்றும், அச்சங்கத்தின் பிரதிநிதியாக இருந்து ஒவ்வொரு வல்லரசும், சில சில நாடுகளை நிருவாகம் செய்து வருவதென்றும் ஏற்பாடு செய்யப்பட்டன. இங்ஙனம் சர்வதேச சங்கத்தின் சார்பாக, ஒரு நாட்டை ஆள்வதற்குரிய அதிகாரத்திற்கே, ‘மாண்டேட்’ என்று பெயர். இந்த அதிகாரத்திற்குட்பட்டு, ஆட்சி புரியும் அரசாங்கத்திற்கு ‘மாண்டேடரி அரசாங்கம்’[1] என்றும், ஆளப்படுகிற நாட்டுக்கு


  1. Mandatory Power.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/19&oldid=1671131" இலிருந்து மீள்விக்கப்பட்டது