உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பாலஸ்தீனம்

போய் விட்டது, ஒரு சில பிரிட்டிஷ் ராஜதந்திரிகளுக்கு ஆச்சரியமா யிருந்தது.

பாலஸ்தீனத்திற்கு வடக்கிலுள்ள சிரியா நாடு பிரெஞ்சு அரசாங்க நிருவாகத்துக் குட்பட்டிருக்கிறதல்லவா? இந்த அரசாங்க நிருவாகத்துக்கு விரோதமாக, சிரியாவிலுள்ள அராபியர்கள் 1925ம் வருஷம் ஒரு பெரிய கலகம் செய்தார்கள். இவர்களுக்கு அநுதாபம் காட்டும் முறையில், பாலஸ்தீன அராபியர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். இதனால், வெளிப்படையான நன்மைகள் ஒன்றும் உண்டாகவில்லையாயினும், அராபியர்களிடையே இருந்த ஒற்றுமை உணர்ச்சி வலுப்பட்டது.

1925ம் வருஷத்திலிருந்து 1928ம் வருஷம் வரையில் சில பொருளாதார காரணங்களுக்காக, யூதர்கள் பாலஸ்தீனத்தில் அதிகமாகக் குடி புகவில்லை. 1925ம் வருஷம் 33,000 யூகர்கள் குடிபுகுந்திருக்க, 1926-27ம் வருஷங்களில் குடி புகுந்த யூதர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக 2,000 யூகர்கள் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறி யிருக்கிறார்கள்! இந்தக் காலங்களில், அராபியர்களின் கிளர்ச்சி சிறிது அடங்கியிருந்த தென்றே கூற வேண்டும். 1929ம் வருஷத்தில் எகிப்து, ஈராக், சிரியா முதலிய நாடுகளில் சுதந்திர உணர்ச்சி முறுக்கேறி நின்றது. இது பாலஸ்தீன அராபியர்களுக்கு ஒரு வித ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளித்தது. இதே சமயத்தில், யூதர்கள் அதிகமாக வந்து குடி புக ஆரம்பித்தார்கள். இவர்களுடைய செல்வாக்கோ நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/58&oldid=1672175" இலிருந்து மீள்விக்கப்பட்டது