பக்கம்:பாலும் பாவையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 அறிந்தவர்களாகவே அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை; வாயமூடி மெளனிகளாகச்சென்றனர். பொழுது விடிவதற்கும் வண்டி எழும்பூர் ஸ்டேஷனை அடைவதற்கும் சரியாயிருந்தது. இருவரும் முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே கீழே இறங்கினர். 'வா, வா! நீ கூட இந்த வண்டியில்தான் வருகிறாயா?மாப்பிள்ளையும் இதே வண்டியில் வருவதாகத்தான் கடிதம் எழுதியிருந்தார்...!” இந்தக் குரலைக் கேட்டதும் கனகலிங்கம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அவனுடைய முதலாளி அங்கே நின்றுகொண்டிருந்தார்! அப்புறம் கேட்க வேண்டுமா?-“ஆ.மா..ம்” என்று சொல்லுவதற்குள் அவன் கதிகலங்கிப் போனான். அதற்குள் அவனுடன் வந்திருந்த அகல்யா பரமசிவத்தின் கவனத்தைக் கவர்ந்தாள். அவ்வளவுதான்; அவருடைய விழிகள் பிதுங்கிக் சிவந்தன! அந்தப் பயங்கரமான விழிகளைக் கண்டதும் அகல்யா வியர்த்து விறுவிறுத்துப் போனாள். அதற்குப்பிறகு அவள் ஒருகணம் கூட அங்கே நிற்கவில்லை; ஒடோடியும் சென்று மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் மறைந்து கொண்டாள். கனகலிங்கம் இவையொன்றையும் கவனிக்கவில்லை. அவன் பரமசிவத்தை நெருங்கி, “வீட்டுக்குப்போய்க் குளித்து விட்டுக் கன்டக்கு வருகிறேன்.” என்று சொல்லி, ரயிலடியை விட்டு வெளியேறினான். அகல்யா பீதியுடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.