பக்கம்:பாலும் பாவையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lெழியில் அடிக்கடி தன்னை நெருங்கி ஏதோ சொல்ல முயன்ற அகல்யாவைக் கனக லிங்கம் ஒன்றும் சொல்ல விடவில்லை; அவள் தன்னுடன் சேர்ந்தாற்போல் வருவதையும் அவன் விரும்பவில்லை; பேசாமல் வருமாறு சைகை காட்டிக்கொண்டே அவன் அவளுக்கு முன்னால் விரைந்து சென்றான். அப்போது அவனுக்கிருந்த கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்-அதாவது, வீடு போய்ச் சேரும் வரை தனக்குத் தெரிந்தவர்களில் யாரும் தன்னைப் பார்க்காமலிருக்க வேண்டுமே, தன்னைப் பற்றி ஏதும் விபரீதமாக நினைத்துக் கொள்ளாமலிருக்க வேண்டுமே என்பதில்தான் அவனுடைய கவனமெல்லாம் இருந்தது; அந்தக் கவனமே கவலையாகவும் பரிணமித்திருந்தது. அகல்யாவின் உள்ளமோ ஒரு நிலையில் இல்லை; அமாவாசை இரவில் அலைமேல் அலை மோதிப் பொங்கும் கடலைப்போல அவளது உள்ளம் பொங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பொங்கு மாக் கடலின் பயங்கர அலைகளுக்கிடையே தோன்றித் தோன்றி மறையும் கட்டுமரம் போல அவளுடைய உள்ளத்தில் அடிக்கடி ஒரு கேள்வி எழுந்து மறைந்து கொண்டிருந்தது. ‘இனிமேல் என்ன நடக்கும்?" ‘இனிமேல் என்ன நடக்கும்? ‘இனிமேல் என்ன நடக்கும்?" இந்தக் கேள்விக்கு விடை காண அவள் எவ்வளவோ முயன்றாள்; முடியவில்லை. ஆயினும் அதற்காக அவள் அசந்து போய் நின்றுவிடாமல் நடந்தாள், நடந்தாள், நடந்துகொண்டே இருந்தாள் அவளுக்கு எதிரே யாரோ இருவர் பேசிக்கொண்டு வந்தனர். அவர்களில் ஒரு வன், "அதெல்லாம் ஒன்றும் நடக்காது' என்று இன்னொருவனிடம் அடித்துச்சொன்னான்