பக்கம்:பாலும் பாவையும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ராதாமணிக்கு இது பிடிக்கவில்லை. "உனக்கு எப்பொழுது பார்த்தாலும் பணத்தைப் பற்றித்தாண்டா பேச்சு?” என்று அவன் அலுத்துக்கொண்டான். “நான் என்னடா செய்வேன்?-எப்பொழுது பார்த்தாலும் எனக்கு, உனக்கு, எல்லோருக்கும் இந்த உலகத்தில் பணம் வேண்டியிருக்கிறதே!” ராதாமணி இதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் மாடியை அடைந்ததும். "நான் வரட்டுமா?” என்றான். “எங்கே வந்தாய்?-ஏன் போகிறாய்?” "நீ ஊரிலிருந்து வந்துவிட்டாயா, இல்லையா என்று அம்மா பார்த்துவிட்டு வரச்சொன்னார்கள்; வந்தேன்-பார்த்தாச்சு போகிறேன்!” என்றான் ராதாமணி. “சரி; சாயந்திரம் வருகிறாயா?-உன்னிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டுமென்று இருக்கிறேன்.” "ஏன் மத்தியானம் சாப்பிட வரமாட்டாயா?-அப்போது அந்த விஷயத்தை சொல்லேன்.” “நான் வரமாட்டேன்.” “ஏண்டா?” “அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன்.” “சாப்பாடு...?” “ஹோட்டலில்...!" “எப்பொழுதுமா?!” “இல்லை; இரண்டு மூன்று நாட்களுக்கு?” “வேண்டாமே!-அம்மாவிடம் சொல்லி இரண்டு பேருக்கும் சாப்பாடு கொடுத்தனுப்புகிறேன்!” "அப்படிச் செய்தால் நல்லதுதான்" “சரி: சாயந்திரம் வந்து பார்க்கிறேன்-நானும் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிட்டு ராதாமணி வெளியே போய்விட்டான். திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு, கனகலிங்கம்