பக்கம்:பாலும் பாவையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 33 ஏன்? என்று § { அவனைக் கைதட்டிக் கூப்பிட்டான். கேட்டுக்கொண்டே வந்தான் அவன். "உன்னுடைய தங்கையைக் கொஞ்சம் இங்கே அனுப்பி வைக்கிறாயா?” என்றான் கனகலிங்கம். “யாரை?-கீதாவையா?” "ஆமாம்.” “பேஷாய் அனுப்பி வைக்கிறேன்!” என்று சொல்லிவிட்டுப் போனான் ராதாமணி. அவன் சென்றதும் அகல்யாவை நோக்கி, "நீ இங்கேயே இரு ! நான் குளித்துவிட்டு வந்து விடுகிறேன்!” என்று சொல்லிவிட்டுக் கனகலிங்கம் குளிக்கும் அறைக்குச் சென்றான். 'நாம் எங்கே பிறந்தோம், எங்கே வளர்ந்தோம்?-எங்கே போனோம், எங்கே வந்தோம்?’ என்று எண்ணி வியந்தவளாய், அகல்யா அங்கிருந்த ஒரு பெட்டியின்மேல் உட்கார்ந்தாள். பிறகு, ‘எங்கேயும் வந்து விடவில்லை; நமக்கு ஏற்கெனவே பழக்கமான சென்னைக்குத்தான் வந்திருக்கிறோம்’ என்று தீர்மானித் தவளாய் எழுந்து சென்று, அவள் கனகலிங்கத்தின் அறையைப் பார்வையிட்டாள். அறை வெள்ளைவெளேரென்று சுண்ணாம்பு அடிக்கப் பட்டுப் பார்ப்பதற்கு அழகாயிருந்தது. சுவரின் நான்கு புறங்களிலும் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், மகாத்மா காந்தி, பாரதியார் ஆகியோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அறையின் ஒரு மூலையில் மூங்கிலால் செய்யப்பட்ட மேஜை யொன்று போடப்பட்டிருந்தது. அதன்மேல் புத்தர் பெருமான் சிலை வடிவில் புன்னகை பூத்தவண்ணம் வீற்றிருந்தார். அவருக்குப் பக்கத்தில் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் புத்தகங்கள் பல வரிசைக் கிரமமாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அந்த மேஜைக்கு முன்னால் ஒரு சிறு மூங்கில் நாற்காலி; அதற்கு இடது பக்கத்தில் ஒரு பிரயாணக்கட்டில், அதன் மேல் இரண்டு தலையணைகளை வைத்து ஒரு பாய் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.