பக்கம்:பாலும் பாவையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அகல்யா இன்னும் கொஞ்சம் முன்னேறிச் சென்று. மேஜைக்கு மேலே சுவரில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த அலமாரியைத் திறந்து பார்த்தாள். அந்த அலமாரியின்மேல் தட்டில் ஒளவையை ஒத்திருந்த ஒரு கிழவியின் போட்டோ சிறிது சாய்ந்தாற்போல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்த்ததும், இந்தக் கிழவி நிச்சயம் அவருடைய க த லி ய யி ரு க் க மு டி ய து : தாயாராய்த்தான் இருக்க முடியும்' என்று அவள் தனக் குத் தானே சிரித்தபடி சொல்லிக் கொண்டாள். அந்த மேல் தட்டுக்குக் கீழிருந்த நடுத் த ட் டில் கண் ணாடி, சீப்பு, தேங்கா யெண்ணெய், பற் பொடி முதலிய சாமக் கிரியைகள் வைக்கப்பட்டிருந்தன. அதற்கும் கீழே இருந்த அத் தட்டிலோ பழைய பத்திரிகைகள் ஒழுங்காக அடுக் கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை யெல்லாம் இமைகொட்டாமல் பார்த்த பிறகு, “பேஷ், அறை பிரமாதம்!” என்று வாய் விட்டுச் சொல்லிக்கொண்டே அகல்யா திரும்பினாள். கதவிடுக்கில் ஒரு மண் கூஜாவும் அதற்கு மேல் ஒரு கண்ணாடி டம்ளரும் இருப்பது அவள் கண்ணில்பட்டது. தண்ணீருக்கு இது போதாது; இன்னும் ஏதாவது ஒரு பெரிய ஏனம் வாங்கிக்கொள்ள வேண்டும்' என்று எண்ணிக்கொண்டே அவள் வெளியே வந்தாள். வராந்தாவுக்குக் குறுக்கே கொஞ்சம் எட்டினாற்போல் சுவர் வைத்துத் தடுக்கப்பட்டிருந்த ஒரு சிறு முலை அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது. இந்த இடத்தைச் சமையல் செய்வதற்கு உபயோகித்துக்கொள்ளலாம்; ஒரு கரி அடுப்பும் நாலைந்து அலுமினியப் பாத்திரங்களும் வாங்கிக் கொண்டால் போதும்’ என்று தீர்மானித்துக்கொண்டு, மீண்டும் பெட்டியின் மேல்