பக்கம்:பாலும் பாவையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அதே சமயத்தில் முதலாளியின் கடைசிப் பையனான கஜபதி வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு டக், டக் என்று மேலே ஏறி வந்து கொண்டிருந்தான். “என்ன கஜபதி. என்ன விஷயம்?” என்று அவனை ஆவலுடன் விசாரித்தான் கனகலிங்கம். கஜபதி என்ற பெயரைக் கேட்டதும் கீதாவை அழைத்துக் கொண்டு அகல்யா அவசர அவசரமாக மேல் மாடிக்குப் போய் விட்டாள்.' 'அப்பா இந்த ரூபாயைக் கொடுத்து விட்டு வரச்சொன்னார்!” என்று கஜபதி பதினைந்து ரூபாயை அலட்சியமாக எடுத்துக் கனகலிங்கத்தினிடம் கொடுத்தான். “எதற்கு?’ என்று கனகலிங்கம் ஒன்றும் புரியாம்ல் கேட்டான். "இந்தக் கடிதத்தைப் படித்துப் பார், தெரியும்!” என்று அவனிடம் ஒரு கடிதத்தையும் எடுத்துக் கொடுத்து விட்டுக் கஜபதி மேலே வந்து உட்கார்ந்தான். அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டே கனகலிங்கமும் அவனைத் தொடர்ந்து மேலே வந்தான். “கனகலிங்கம், இன்னொரு முறை உன்னுடைய முகத்தில் விழிக்க நான் விரும்பவில்லை. எனவே, இன்றுடன் சம்பளக் கணக்கைத் தீர்த்துப் பணத்தை கஜபதியிடம் கொடுத்தனுப்பியிருக்கிறேன். பெற்றுக்கொண்டு உடனே ரசீது கொடுத்தனுப்பு! ரயில்வே பார்சலையும் நானே எடுத்துக் கொள்கிறேன். நீ வரவேண்டாம். இப்படிக்கு பரமசிவம். கடிதத்தைப் படித்து முடித்ததும் கனகலிங்கம் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான்.