பக்கம்:பாலும் பாவையும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 “ஒரேயடியாக க் கலை ஞானபுரத்துக் கணக்கையும் தீர்த்துவிட்டு உட்கார்ந்தால் செளகரியமாயிருக்குமே!’ என்று குத்தலாகச் சொன்னான் அந்தக் குட்டி முதலாளி. அவனிடம் ஏற்கெனவே சரிக்கட்டி வைத்திருந்த கணக்குத தாளையும் பணத்தையும் மெளனமாக எடுத்துக் கொடுத்துவிட்டுக் கனகலிங்கம் தட்டுத் தடுமாறிக் கொண்டே மறுபடியும் உட்காரப் போனான். “ரசீது..?” என்று கேட்டான் அவன். “அதற்கென்ன, இதோ எழுதித் தருகிறேன்!” என்று நடுங்கும் குரலில் சொல்லிய வண்ணம் இரண்டு வரிகளைக் 'கிடுகிடு வென்று எழுதி அவனிடம் கொடுத்துவிட்டு, 'உஸ்ஸ்ஸ். என்ற ஆசுவாசப் படுத்திக்கொண்டே கனகலிங்கம் உட்கார்ந்தான். יין அதைப் பெற்றுக் கொண்டு கஜபதி சென்றதும் அகல்யாவும் கீதாவும் மடமட வென்று கீழே இறங்கிவந்தார்கள். வந்ததும் வராததுமாக, “என்ன அண்ணா?” என்று ஓடோடியும் வந்து கேட்டாள் கீதா. “ஒன்றுமில்லை, அம்மா! நீ வேண்டுமானால் வீட்டுக்குப் போகிறாயா?” என்றான் கனகலிங்கம். 'ஏன், வெளியே போகவில்லையா?” 'இல்லை.” “சரி, அண்ணா! அடிக்கடி நான் வந்து அக்காவைப் பார்த்துக் கொள்கிறேன்!” என்று சொல்லி விட்டு, நடக்கத் தெரிந்தும் நடக்க விரும்பாத வயதினளான குழந்தை கீதா ஓடினாள். அவள் துள்ளித் துள்ளி ஒடும் அழகைக் கண்டு அந்த நிலையிலும் உள்ளங் குளிர்ந்து பரவசமடைந்தான் கனகலிங்கம். அகல்யா அனுதாபத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டே, "எல்லாம் என்னால் வந்த வினை! நான் முதலிலேயே உங்களைப் பற்றித் தீர விசாரித்திருக்க வேண்டும்” என்றாள். “என்ன விசாரித்திருக்க வேண்டும் என்கிறாய்? என்று