பக்கம்:பாலும் பாவையும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடந்த நாலைந்து நாட்களாக அகல்யாவிடம் இருந்த துடிப்பை இப்பொழுது காணவில்லை. அவள் புது மணப் பெண்ணைப் போல த் திடீரென்று அடக்கத்தை க் கைக்கொண்டாள் அத்துடன் தன் எதிர்காலத்தைப் பற்றியும் அவள் சிந்திக்கத் தொடங்கினாள். சிந்திக்கச் சிந்திக்கக் குழப்பம்தான் அதிகரித்தது. என்ன இருந்தாலும் படித்த பெண், பாருங்கள்!- குழப்பம் அதிகரிக்க வில்லை யென்றால் படித்துத்தான் என்ன பலன்? இந்த லட்சணத்தில் மத்தியானம் சாப்பிட்டு முடிந்ததும் 'ஏன், அகல்யா! என்னை நீ இன்னும் காதலிக்கிறாயா, என்ன?” என்று ஓர் அபூர்வமான கேள்வியை இருந்தாற்போலிருந்து கேட்டு வைத்தான் கனகலிங்கம். அகல்யா முகத்தில் ஆச்சரியச் குறியைப் போட்டுக் கொண்டு அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அவளால் அவனை யும் புரிந்துகொள்ள முடியவில்லை; அவனுடைய கேள்வியையும் புரிந்துகொள்ள முடியவில்லை சாட் சாத் கடவுளைப் போல அவன் அவளுக்குப் புரியாத புதிராயிருந்தான்! இருந்தாலும், “எதற்காக அப்படிக் கேட்கிறீர்கள்?' என்று அவள் பதிலுக்குக் கேட்டு வைத்தாள். - “வேலையோ போயாச்சு கீழேயிருக்கும் சாயபு ஊருக்குப் போயிருப்பதால் அவருக்குக் கொடுக்க வேண்டிய இரண்டு மாத வாடகைப் பணம் இருபது ரூபாய் வைத்திருந்தேன். அதையும் கலைஞானபுரத்தில் செலவழித்தாச்சு. இப்போது கஜபதி கொண்டுவந்து கொடுத்த பதினைந்து ரூபாயைத் தவிர என்னிடம் ஒரு காலணா கிடையாது. இதை வைத்துக்கொண்டு நான் தான் உன்னை எத்தனை நாட்கள் காதலிக்க முடியும்? இல்லை நீதான் எத்தனை நாட்கள் என்னைக் காதலிக்க முடியும்?' என்று கேட்டான் அவன் அகல்யாவுக்கு இது பெரிய சோதனையாயிருந்தது. அவள்