பக்கம்:பாலும் பாவையும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு நின்றாள். "ஆனாலும் எனக்கு ஒரு தைரியம் இருக்கிறது.” என்று அவன் ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அவள் இடைமறித்து, “என்ன தைரியம்?” என்று உற்சாகத்துடன் கேட்டாள். 'உனக்குத்தான் காசைவிடக் காதல் பெரிதாச்சே!-அதனால் எப்படியும் என்னைக் காதலிப்பாய் என்ற தைரியம் எனக்கு!” என்றான் அவன். அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டு, “சரி தான் போங்கள். உங்களுடைய தைரிய மும் நீங்களும்!” என்றாள். “எங்கே போவது ? - உன்னை விட்டு நான் போவதா? என்னை விட்டு நீ போவதா? அல்லது நம் இருவரையும் விட்டு விட்டு அந்தக் கரைகாணாத காதல் எங்கே யாவது போய்த் தொலைவதா?” என்று அவன் வெறுப்புடன் அடுக் கி க் கொண்டே போனான். "காதல், காதல்!-அதைத் தவிர உங்களுக்கு வேறு எதைப் பற்றியும் பேசத் தெரியாதா?” என்றாள் அவள். "நீ சொல்வதுபோல் வாழ்க்கைக்குக் காதல் தானே ஜீவநாடி? காசா ஜீவநாடி?” என்றான் அவன். "நீங்கள் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் நான் அழுது விடுவேன்!” என்று தன்னுடைய ஆள் காட்டி விரலைக் காட்டி