பக்கம்:பாலும் பாவையும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 இறங்கினான் அப்போது மாடிக் கதவை லேசாகத திறந்து யாரோ எட்டிப் பாாப்பது போலிருக்கவே, "யார், அது?” என்று கேடடுக் கொண்டே அவன் விரைந்தான் அடுத்த நிமிஷம் அந்த ஆசாமி விழுந்தடித்துக் கொண்டு ஓடும சத்தம் கேட்டது' அகல்யா பரபரப்புடன் வெளியே வந்து பார்த்தாள ராதா மணியும் கனக லிங்கமும் அவனைத் தொடர்ந்து ஒடிக்கொண்டிருந்தனர். ஆனால் அவன் பிடிபடவில்லை, அதறகுள் மாயமாய் மறைந்துவிட்டான் “சுதந்திரம் வந்தாலும் வந்தது, நகரில் திருடர்களின் தொல்லை அதிகமாய்ப் போச்சு!” என்று விமர்சனம்’ செயதுகொண்டே ராதாமணி வந்து படுத்தான்; அவனுக்குத் தூக்கம் வந்துவிட்டது அவனைத் தொடர்ந்து வந்த கனகலிங்கம் மாடிக்கதவைத் தடா லென்று சாத்தித் தாளிட்டுவிட்டு வந்து படுத்தான் அவனுககுத் தூக்கம் வரவில்லை, ஒரு வேளை இன்று வந்தவனும், கலைஞானபுரத்தில் அன்று வந்தவனும் ஒரே ஆளாயிருக்கு மோ' என்று அவன் வாயி ல் விர ைல வைத்துக்கொண்டு எண்ணமிடலானான்