பக்கம்:பாலும் பாவையும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 யாருக்கோ சாக வழி சொல்லிக் கொடுத்துக் கொணடிருக்கிறாயே!” என்று கூறிக்கொண்டே ராதாமணி படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தான் “ஒன்றுமில்லை; காதல் பிரச்சனையைக் கொஞ்சம் அலசிக் கொண்டிருக்கிறேன்.” “அது பொல்லாத பிரச்சனை யாச்சே!-சாட் சாத் ராமபிரானுக்கும் சீதா தேவிக்கும் இடையே அது இருந்திருக்கிறது; அர்ஜூனனுக்கும் பாஞ்சாலிக்கும் இடையே கூட அது இருந்து தொலைந்திருக்கிறது!-அதைப் பற்றி யாரா யிருந்தாலும் ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு லேசான காரியமல்லவே!” என்றான் ராதாமணி. “அது என்னடா, அது!-எது என்று தெளிவாகத்தான் சொல்லித் தொலையேன்?” "காதல்தான்!” என்று அவன் காதோடு சொல்லிவிட்டு, ராதாமணி அவசர அவசரமாகச் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான் “என்ன, வீட்டுக்கு கிளம்பிவிட்டாயா?” என்று கேட்டான் கனகலிங்கம். "ஆமாம்” என்றான் அவன் “உன்னிடம் நான் ஒரு சமாசாரம் சொல்ல வேண்டுமே?மத்தியானம் எனக்குச் சாப்பாடு வேண்டாம்” “ஏன்?” r “நான் எங்கேயாவது போய் வேலை தேடலாமென்று இருக்கிறேன்; எப்பொழுது திரும்புவேனோ என்னமோ?” “சரி, அவர்களுக்கு ?” என்று அகல்யாவைச் சுட்டிக் காட்டிக் கேடடான் ராதாமணி “எனக்கும் வேணடாம்; நான் இன்று என் சிநேகிதி வீட்டுக்குப் போய் வரலாமென்று இருக்கிறேன்” என்றாள் அகல்யா “எந்தச் சிநேகிதி?-அன்றொரு நாள் உனக்கு அழகுச்