பக்கம்:பாலும் பாவையும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஆவலுடன் வரவேற்கத தயாராயிருககிறேன் ” “எதற்கு ” "வேறெதற்குமில்லை இன்று வரை நான் எடுத்திருக்கும் நல்லவன்’ என்ற பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்குததான்” “நல்லவன் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று அகல்யா கேட்டாள் “தெரியும், ஒன்றும் தெரியாத அப்பாவி எனறு அர்ததம்' என்றான் கனகலிங்கம் - "அப்படியிருக்கும்போது அந்த அசட்டுப் பட்டத்தைக் கட்டிக்கொண்டு ஏன் அழுகிறீர்கள?” "எல்லாம் தெரிந்தவனா யிருப்பதை விட ஒன்றும் தெரியாதவனாயிருப்பதே மேல் என்று நான் நினைப்பதால்தான்' “உங்களுடைய புத தி ஏன்தான் இப்படியெல்லாம் போகிறதோ ?” “என்னுடைய புத்தி அப்படிப் போகவில்லை. உலகம் அப்படிப் போய்க்கொண்டிருக்கிறது!” “அந்த உலகத்தை எதிர்த்து நிற்க உங்களுக்குத் தைரியமில்லையா?” "தைரியம் இருக்கிறது, அதற்கு வேண்டிய பணம் தான் என்னிடம் இல்லை!” “பணம் என்னத்துக்கு? மனமிருந்தால் போதுமே” “அது ஊரை ஏமாற்றும் பேச்சு, அந்த மாதிரிப்பேசி உன்னை ஏமாறற நான் விரும்பவில்லை!” “என்னமோ, போங்கள்!-உங்களை என்னால் புரிநது கொளளவே முடியவில்லை' என்றாள் அவள அலுயபுடன் 'உன்னையும் தான் என னால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்றான் அவன் வெறுப்புடன >k 米 ※ சிறிது நேரத்துககுப் பிறகு கனகலிங்கம் அறையைப் பூட்டிச சாவியைக கொடுப்பதறகாக அகல்யாவிடம வந்தான் அதை