பக்கம்:பாலும் பாவையும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதற்குமுன் சென்னை ரஸ்தாக்களில் எத்தனையோ தடவை அகல்யா தன்னந் தனியாக நடந்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அவள் எதையும் யாரையும் ஒரு முறைகூடத் திரும்பிப் பார்த்ததில்லை: இப்பொழுதோ அவள் எல்லாவற்றையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றாள். குறிப்பாக ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், வளையல் கடைகள், செருப்பு கடைகள் ஆகியவற்றின்மீது அவள் கவனம் அடிக்கடி சென்றது. அங்கே தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது நின்று கொண்டிருப்பார்களோ, அவர்கள் தன்னைக் கண்டதும் தங்களுக்குள் ஏதாவது பேசிக்கொள்வார்களோ என்று அவளுக்கு அச்சமாயிருந்தது. அதற்கேற்றாற்போல் அங்கங்கே அவளுக்குத் தெரிந்தவர்கள் ஓரிரு வர் இல்லாமலும் போக வி ல் ைல : அவர்கள் அவளை ப்பற்றிப் பேசாமலும் இருக்கவில்லை. 莓委会 - 'இதோ போகிறாள் பார். இவள் _ 磅 个 ༤ཛརྡ தான் அகல்யா!' என்று சுட்டிக் இ. காட்டினாள் அவர்களில் ஒருத்தி. 'எனக்குத் தெரியுமே!-யாரோ ; ஒருவனுடன் ஒடிப் போய்விட்டாள். * என்று சொன்னார்களே. அவள் தானே இவள்?’ என்றான் இன்னொருத்தி. ஆமாம்; ஆனால் ஓடிப் போகவில்லையாம்: நடந்துதான் போனாளாம்! என்றாள் வேறொருத்தி 'களுக்கென்று சிரித்துக்கொண்டே. 'எனக்கு யாரோ பறந்து போனாள் என்று சொன்னார்களே!’ என்றாள் வேறொருத்தி கலகல வென்று நகைத்துக் கொண்டே இவ்வாறு அந்த நார்மணிகள் அகல்யாவைப் பழிப்பதன் மூலம் தங்களைத் தாங்களே. தங்களுக்குத் தெரியாமல் பழித்துக் கொண்டார்கள். அந்தப் பழிச்சொற்களைக் கேட்கக் கேட்க