பக்கம்:பாலும் பாவையும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 'எனக்குத தெரியுமே யாராவது உனக்கு விரோதமாக உணமையைச் சொன்னால் நீ அவர்களை அடிதது விடுவாய் என்று!-போடா, மண்டு!-குழந்தையை ஏன் அடித்தாய?-நீ அழாதே அம்மா, அழாதே' என்று சொல்லிக்கொண்டே, கனக லிங்கம் கீதாவைத் தேற்றி னான்; அவளும் சமாதானமடைந்து அழுகையை நிறுத்தினாள் ராதாமணி இருபது ரூபாயை எடுத்துக் கனகலிங்கத்திடம் கொடுத்துவிட்டு, “காலையில் எங்கோ வேலை தேடப் போகிறேன் என்றாயே, ஏதாவது கிடைத்ததா?’ என்று கேட்டான் 'அவ்வளவு சுலபத்தில் வேலை கிடைப்பதாயிருந்தால் தங்களைத தர்மகர்த்தாக்களாக நினைத்துக கொண்டிருக்கும் முதலாளிகள் தொழிலாளிகளை ஏன் மிரட்டு, மிரட்டு’ என்று மிரட்டப் போகிறார்கள்?” “சரி, நாளைக் காலையில் நீ என்னுடன் வருகிறாயா?இங்கிலிஷ மருந்துக் கடையொன்றில் ஏதோ வேலை இருக்கிறதாம், நான் உன்னை அழைத்துக்கொண்டு போய் அங்கே விடுகிறேன்.” “ரொம்ப சந்தோஷம்!-அதற்கென்ன அப்படியே வருகிறேன்.” “அதற்குள் சந்தோஷப்பட்டு விடாதே. வேலை கிடைத்த பிறகு வேண்டுமானால் சந்தோஷப்படலாம்!” என்று சொல்லிவிட்டு, ராதாமணி கீதாவை அழைததுக கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான் "அப்படியானால் இன்றிரவு நீ இங்கே படுத்துக கொள்ளக்கூட வரமாட்டாயல்லவா?” என்று கனகலிங்கம் கேட்டான் ராதாமணி, ‘எப்படி வர முடியும?-அம்மா கோபித்துக் கொள்வார்களே' என்றான் "ஆமாம; வந்தால் நீயும் என்னைப்போல் கெட்டுப் போனாலும் கெட்டுப் போய்விடுவாய்' என்றான் கனகலிங்கம்