பக்கம்:பாலும் பாவையும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ராதாமணி அசடு வழியச் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றான் அவன் சென்ற பிறகு, இயற்கையின் விந்தையே விந்தை' ஒரு பெண்ணுககு என்னதான் நல்ல மனதோடு இன்னொரு ஆண்மகன் உதவி செய்தாலும், அதை விபரீதமாக உலகம் எடுத்துக்கொண்டு விடுவதற்குப் பாழும் இயற்கை சுலபமாக இடங் கொடுத்துவிடுகிறது'-இந்த லட்சணத்தில் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழவேண்டுமென்று பாரதியார் கனவு கண்டிருக்கிறார் அவருடைய கனவு என்றுதான் நனவாகப் போகிறதோ? என்று எணணிக் கொண்டே அவன் வானத்கைப் பார்த்தான் வானம் நிர்மலமாயிருந்தது. இந்த வானததைப் போல மனிதர்களின் மனமும் நிர்மலமாயிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?' என்று அவன் மறுடியும் எண்ணி, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான் இதே சிந்தனையில் அன்றிரவு சாப்பிடுவதற்காக அவன் ஹோட்டலுக்குக்கூடப் போகவில்லை உட்கார்ந்தவன் அப்படியே உட்கார்ந்துகொண்டிருந்து விட்டான் சிறிது நேரத்துக்குப் பிறகு அவனுடைய சிந்தனை வேறு திசையை நோக்கித் திரும்பிற்று அவன் அகல்யாவை நினைவு கூர்ந்தான் அவள் வந்தால் என்ன செய்வது? அவளிடமிருந்து இன்னும் கொஞ்ச நாட்களுககுத தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது?-ராதாமணி கூட நம்மைக் கைவிட்டு விட்டானே' என்று எண்ணி, அவன மேலும கீழும் பார்த்தான் மணி ஏழு. எட்டு, ஒன்பது, பத்து என்று பதினொன்றும் அடித்து ஒயந்தது-அகல்யா வாவில்லை. ஆம், அவள் வரவேயில்லை' 'காலையில் திருமபி வருவதாகத்தானே சொல்லிவிட்டுப் போனாள்?-அதற்குள் என்ன ஆகியிருப்பாள்? என்று ஒருகணம் யோசித துப் பார்த்தான அவன் அவனுக்கு ஒன்று மி