பக்கம்:பாலும் பாவையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அனுதாபத்துடன் பார்த்துக்கொண்டே நின்றான் நூலாசிரியரின் தலை மறைந்ததும், “ஏண்டா உனக்கு நான் எத்தனை தரம் சொல்லுவது?நம் முடைய பாலிஸி யை இப்படியா வருவோர், போ வோரி ட மெல் லாம் சொல் லி க் கொண்டிருப்பது? ஆசாமியைத்தான் நேரில் பார்த்தாச்சு; அப்புறம் ஆசிரியர் செத்துவிட்டாரா இல்லையா?’ என்று கேட்பானேன்? பேசாமல் கையெழுத்துப் பிரதியை வாங்கி வைத்திருந்து ஒரு வாரத்துக்குப் பிறகு திருப்பிக் கொடுத்துவிட வேண்டியதுதானே?-சரிசரி. இந்த இழவைக் கொண்டுபோய் எந்த மூலையிலாவது போட்டுவிட்டு வா!உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” என்றார் முதலாளி கனகலிங்கம் அந்தக் கையெழுத்துப் பிரதியைக் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து, “என்ன விஷயம்?” என்று விசாரித்தான். “நாளை மறுநாள் அருந் தமிழ் வளர்த்த அகத்தியனுக்குக் கலைஞானபுரத்தில் விழாக் கொண்டாடப் போகிறார்களாம். மூன்று நாட்கள் விழா தொடர்ந்து நடக்குமாம். இங்கேதான் வியாபாரம் மந்தமாயிருக்கிறதே, நீ ஒரு முந்நூறு ரூபாய்ப் புத்தகங்களுடன் அங்கே போய்விட்டு வருகிறாயா?” என்று கேட்டார் பரமசிவம். கனகலிங்கம் ஒன்றும் பதில் சொல்லவில்லை; பேசாமல் இருந்தான். "ஏன் பேசாமலிருக்கிறாய்?’ என்று கேட்டார் அவர், “நான் என்னத்தைச் சொல்வது? அகத்தியனுக்காக அனுதாபப் படுகிறேன்!” என்றான் அவன். “என்ன, அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே, தம்கையிலிருந்த தினசரிப் பத்திரிகையைக் கீழே வைத்துவிட்டு, அவனுடைய முக த்தை அவர் வியப்புடன் அண்ணாந்துப் பார்த்தார். ”அவன் ஒருவன்தான் இந்த விழாக்காரர்களின் கையில் இதுவரை சிக்காமலிருந்தான் பாவம், இப்பொழுது