பக்கம்:பாலும் பாவையும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 'இல்லை, நயவஞ்சகன்!’ ‘நயவஞ்சகன் நயவஞ்சகன்! நயவஞ்சகன்..!" கனகலிங்கம் சட்டென்று எழுந்து உட்கார்ந்து தன் காதுகளை இரு கைகளாலும் பொத்திக் கொண்டான். அவனால் நெடுநேரம் அப்படியே உட் கார்ந்து கொண்டிருக்க முடியவில்லை; எழுந்து சென்று விளக்கைப் போட்டு விட்டு அப்படியும் இப்படியுமாகச் சிறிதுநேரம் உலாவினான். 'கலகல” வென்ற சிரிப்பொலி எங்கிருந்தோ வந்து அவன் காதில் விழுந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான்; யாரையும் காணவில்லை. 'எல்லாம் வெறும் பிரமை' என்று முணுமுணுத்துக் கொண்டே விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் படுத்தான். அகல்யாவின் கவர்ச்சி மிகுந்த உருவெளித் தோற்றம் அவனுடைய நினைவில் அடிக்கடி தோன்றி மறைந்தது