பக்கம்:பாலும் பாவையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 | * அவனும் அகப்பட்டுக் கொண்டுவிட்டான் போலிருக்கிறது என்றான் அவன் மிக்க வருத்தத்துடன். “ந மக்கு ஏன் அந்த வீண் வம் பெல்லாம்? இகழ் வதாயிருந்தால் எதை வேண்டுமானாலும் இகழலாம்.” "உண்மைதான்! ஆனால் புகழ்வதாயிருந்தாலும் எதை வேண்டுமானாலும் புகழலாமல்லவா?” என்றான் அவன். "நான் சொல்வதைக் கேள், தம்பி!- நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் என்ன? அங்கே ஏதாவது வியாபாரம் நடக்குமா, நடக்காதா...?” “எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அகத்தியனுக்கு இனி யாரும் பேரும் புகழும் தேடி வைக்க வேண்டாம். அவன் ஒரு வேளை உயிரோடிருந்து அன்ன விசாரத்தால் ஆட்கொள்ளப் பட்டிருந்தாலும், யாராவது அவனுக்கு நிதி திரட்டிக் கொடுக்கலாம். அதற்கும் இப்பொழுது அவசியமில்லை. அகத்தியனையும் பணத்தையும் துணையாகக் கொண்டு பேரும் புகழும் அடையவிரும்பும் சில பிரகிருதிகள் அவனுக்கு விழா நடத்தப்போகிறார்கள். பொழுது போக்குக்குக் காசு செலவழிக்க வழியில்லாதவர்கள் அங்கே வந்து கூடப் போகிறார்கள். அப்படிப்பட்ட் இடத்தில் புத்தக வியாபாரம் எப்படி நடக்கும்? பொரி, கடலை வியாபாரம் வேண்டுமானால் நடக்கும். ஆடல் பாடலுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் அனாயாசமாக விட்டெறிபவர்களும், அரை நிர்வாணக் காட்சியை சினிமாவில் அலுக்காமல் பார்ப்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்னரே இரண்டரை ரூபாய் டிக்கெட்டை முண்டியடித்துக்கொண்டு வாங்குபவர்களும் நிறைந்த இந்தப் பட்டணத்திலேயே புத்தகம் என்றால் இரவல் தருகிறாயா?’ என்று கொஞ்சங் கூடக் கூச்சமின்றிக் கேட்கிறார்கள். அப்படி யிருக்கும்போது.” கனகலிங்கம் தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் பரமசிவத்துக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்துவிட்டது. அவர் தமக்கு எதிரேயிருந்த கல்லாப் பெட்டியின்மேல் ஓங்கி ஒரு குத்து விட்டுவிட்டு, “எது எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப்