பக்கம்:பாலும் பாவையும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அவளுடைய கண்களிலிருந்து நீர் பொல பொல வென்று உதிர்ந்து கொண்டிருந்தது அவவளவுதான், "சரி, சரி! வர், போவோம்!” என்று அவள் கரத்தைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துக்கொண்டு வந்து சியாமளா காரில் உட்கார வைத்தாள் வழியில் இருவரும் ஒன்றும் பேசவில்லை அவர்கள் வீட்ட்ை அடைந்தபோது மணிவண்ணன் ரேடியோவைத் திருப்பி அன்றையச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தான் 'ஏற்கெனவே ரொம்ப சுறுசுறுப்பு, இந்த ரேடியோக்காரர்கள் வேறு அன்றாடச் செய்தியைச் சொல்லி உங்களைப் போன்றவர்களுக்குப் பத்திரிகை படிக்கும் அவசியம் கூட இல்லாமற் செய்துவிடுகிறார்கள்!” என்று சொல்லிக்கொண்டே, சியாமளா உள்ளே நுழைந்தாள் "அப்படியானால் நீ என்னைச் சோம்பேறி என்று சொல்கிறாயா?” என்றான் மணிவண்ணன் "இல்லாமல் என்ன ?” “ரொம்ப சந்தோஷம்; சோம்பேறித்தனத்தில்தான் சுகமும் இருக்கிறது .” "ஆமாம், ஆமாம் அதனால்தான் ஊரில் சாமியார்களின் கூட்டம்கூட வரவிர அதிகமாகிக் கொண்டேபோகிறது!” "அப்படியானால் ஊரிலுள்ள சாமியார்களெல்லாம் சோம்பேறிப் பயல்கள் என்றா நீ நினைக்கிறாய்?-அடபாவமே! அவர்கள் மோட்சத்துக்கு வழி காட்டுபவர்களாயிற்றே.” "மோட்சத்துக்கு யாராவது வழி காட்ட வேண்டுமா, என்ன? ஒரு முழக் கயிறோ, அல்லது ஒரு பாழுங் கிணறோ, அதுவுமில்லையென்றால் ஒரு சிறு துளி விஷமோ இருந்தால் போதாதா?” “எதற்கு - ?" "மோட்சமடைவதற்குததான்' 'உனக்கு விஷயமே புரியவில்லை மோட்சமடைவ தென்றால் செததுப் போவதில்லைடி, செததுப் போவதில்லை ' “பின் என்னவாம்?” ייו ‘கடவுளைக் கண்ணால் காணபது