பக்கம்:பாலும் பாவையும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 விட்டது ஆயினும் அந்தப் பாண்'டின் மேல் அடிக்கும் ஒவ்வொரு அடியும் அவள் தலைமேல் தன, தண்' என்று அடிப்பது போலிருந்தது. அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் ஆத்திரம் பற்றிக்கொண்டுவந்தது அவளுக்கு ஓடோடியும் சென்று அவன் மென்னியைப் பிடித்துத் திரு கிக் கொன்றுவிடலாமா என்று அவள் நினைத்தாள் ஆனால் தமிழ் நாட்டுப் பெண்களுக்கே உரித்தான சகிப்புத் தன்மையும் பெருந்தன்மையும் அதற்குக் குறுக்கே வந்து நின்று தொலைத்தன. 'சீசீ! எவ்வளவு பயங்கரமான யோசனை!-நம்மால் ஒரு பாவமும் அறியாத அந்த மணமகளின் வாழ்க்கை ஏன் பாழாக வேண்டும்?-அவள் வாழட்டும்; அவளுக்காக அந்தத் துரோகியும் வாழட்டும்!" 'உம், அவன் வாழாமலென்ன?-அவன்தான் எமனுக்குப் பிரதிநிதியாக வந்து இந்த உலகத்தில் பிறந்திருக்கிறானே சமூகம் காளி யென்றால் அவன் பூசாரியாக வந்து வாய்த்திருக்கிறானே!அந்தச் சண்டாளன் இன்னும் எத்தனை பெண்களின் கற்பைச் சூறையாடப்போகிறானோ? அவர்களில் எத்தனை பேரை எமலோகத்துக்கு அனுப்பப் போகிறானோ? எத்தனை பேரை சமூக மென்னும் பயங்கரக் காளி க்கு ப் பலி கொடுக்கப்போகிறானோ? "ஐயோ, பாவம்; தன்னையும் தன் உயிரையும் அந்தக்குப்பைமேட்டு நாயிடம் ஒப்படைக்கப் போகும் அவளுடைய கதி? அட, கடவுளே! நான் கெடடாலும் சரி; அல்லது செத்தாலும் சரி, அவளையாவது அவன் என்னைக் கைவிட்டதுபோல் கைவிடாமல் இருக்கட்டும' இந்த முடிவுக்கு வந்ததும் அவள் அங்கே நிற்கவில்லை; 'மடமட'வென்று நடந்தாள் அப்படி நடக்கும் போது யார் கைவிட்டாலும் அவர் நம்மைக் கைவிடமாடடார்' என்னும் நம்பிக்கை அவளுடைய இதய அந்தரங்கததில் மேலோங்கி நின்றது