பக்கம்:பாலும் பாவையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 போகட்டும்; நீ அங்கே போய்த்தான் வரவேண்டும்!” என்றார் கடுகடுப்புடன். இந்த 'உத்தரவு முதலாளியிடமிருந்து பிறந்ததும் கனகலிங்கம் என்ன இருந்தாலும் தான் தொழிலாளி என்பதை நினைவு கூர்ந்தான். உடனே தன் மூளைக்கு வேலை கொடுப்பதை நிறுத்திவிட்டு, “சரி” என்று தலையைப் பலமாக ஆட்டிவிட்டான் அவன் “நாளை இரவு வண்டிக்குப்போகிறாயா, இல்லை.” என்று இழுத்தார், அவர் மீசையை ஒதுக்கிவிட்டுக் கொண்டே. “இன்றிரவு வண்டிக்கே வேண்டுமானாலும் போகிறேன்!” என்றான் அவன் கைகளைக் கட்டிக்கொண்டே. “இன்றிரவு அங்கே போய் என்ன செய்வது? நாளை இரவு போனால் போதும்.” “gffì!” “இந்தா, இந்தப் பத்து ரூபாயை வைத்துக் கொள்; கலைஞானபுரம் போய்ச் சேருவதற்கு இது போதும். நாளைக் காலையில் வந்ததும் புத்தகங்களைப் பொறுக்கி எடுத்துப் பார்சல்” கட்டி ரயிலில் அனுப்பிவிடு; நீ போய் அங்கே டெலிவரி’ எடுத்துக்கொள்ளலாம். என்ன சொல்கிறாய்?” "அப்படியே செய்கிறேன். ஆனால் அங்கிருந்து திரும்பி வருவதற்கு.?” “பணம் வேண்டும் என்கிறாயா?” "ஆமாம்.” 'அதற்குத்தான் புத்தகங்கள் இருக்கின்றனவே?” கனகலிங்கம் கொஞ்சம் தயங்கினான். “ஏன் தயங்குகிறாய்?” என்று பரமசிவம் கேட்டார். ஒருவேளை விற்காவிட்டால்...?” “என்ன தம்பி, நீ கொஞ்சங்கூடத் தன்னம்பிக்கை இல்லாதவனா யிருக்கிறாயே? வாழ்க்கையில் அவசியம் வேண்டியது அதுதான், தம்பி!”