பக்கம்:பாலும் பாவையும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 'உங்களுக்கு இரண்டு மாத வாடகைப் பணம் சேரவேண்டு மல்லவா?- அதுதான் இது!” “அச்சா!” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பணத்தை வாங்கி ச் சட்டைப் ைபயில் போட்டுக்கொண்டார் சாயபு. N “ப ஹூத் அச்சா!” என்று & கனகலிங்கம் பதிலுக்குச் சிரித்துக் N கொண்டே சொல்லி விட்டு, “உங்களால் ஒரு காரியம் ஆக வேண்டும். உங்களுக்கு யாராவது ஒரு பெரிய மனிதரைத் தெரியுமா?” என்று வினயத்துடன் கேட்டான், تلاق ෆ wo “ஓ தெரியுமே!-உங்களுக்கு என்ன காரியம் ஆகவேணும்?” 'ஒரு பெண்ணை எப்படியாவது ஸ்ேவாஸ்தன த்தில் சேர்த்துவிட வேண்டும். அதற்கு யாராவது ஒரு பெரிய மனிதர் சிபார்சு செய்தால் தேவலை...' ஸ்ே வாஸ்தனத்தில் அனாதைகள், ஆதரவற்ற வர் களைத்தானே சேர்த்துக் கொள்கிறார்கள்? அத்ற்குச் சிபார்சு வேண்டுமா, என்ன?” "ஆமாம், சிபார்சு வேண்டியிருப்பதால்தான் கேட்கிறேன்.” “அனாதைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச்சென்று கொண்டு வந்தல்லவா ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்?-அவர்களுக்குச் சிபார்சு வேண்டுமென்றால் அந்த ஆசிரமம் இருப்பதும் ஒன்றுதான்; இல்லாமலிருப்பதும் ஒன்றுதான்!” “என்ன செய்வது?-சாகக் கிடக்கும் நோயாளிகளை சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டுமென்றாலே சிபார்சு வேண்டியிருக்கிறதே! அப்படியிருக்கும் போது அனாதை களுக்குச் சிபார்சு வேண்டியிருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?" -