பக்கம்:பாலும் பாவையும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 “ஏழெட்டு ரூபாய் இருக்கும். “பூ இவ்வளவுதானா?-இருந்தாலும் விடாதீர்கள் உடனே போலீஸில் ‘ரிப்போர்ட் எழுதி வையுங்கள் ஒருவேளை பர்ஸ்’ கிடைத்தாலும் கிடைக்கும்!” “எழுதி வைத்து என்ன லார், செய்வது?-அவர்கள் நீ திருடினது உண்மை தானா? என்று தான் அந்தத் திருடனை விசாரிக்கப் போகிறார்களே தவிர, ஏ ன் திருடினாய்?’ என்று விசாரிக்கப் போவதில்லை; அதனால் அவன் திருடுவதையும் இந்தப் பிறப்பில் நிறுத்தி விடப் போவதில்லை!" என்றான் அவன் அலுப்புடன். "அப்படியானால் உங்களிடம் இன்னும் ஏதாவது இருந்தால் அதையும் கொண்டு வந்து அவனைக் கண்டுபிடித்து கொடுங்கள்!” என்று அவர் வெறுப்புடன் சொல்லிவிட்டு, விறைப்புடன் நடந்தார். "பணக்காரர்கள் சட்டத்தின் அனுமதியுடன் திருடினால் ஏழைகள் சட்டத்தின் அனுமதியில்லாமல் திருடுகிறார்கள்இவ்வளவுதானே அவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசம்?” என்று சொல்லிக்கொண்டே, கனகலிங்கம் 'பர்ஸை மறந்து, பசியை மறந்து பஸ்ஸையும் மறந்து கண்டக்டர் சொன்னபடி நடராஜா ஸர்வீஸ் கிளம்பினான். அவன் வீடு வந்து சேர்ந்தபோது மணி ஒன்பதுக்கு மேலிருக்கும். இனிமேல் பணத்தைப் பற்றிய கவலையும் நமக்குக் கிடையாது!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே, அவன் ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை எடுத்துக் குடித்துவிட்டு மேல்மாடிக்குச் சென்றான். சிறிது நேரம் அங்கே உலாவிக் கொண்டிருந்து விட்டுக் கீழே இறங்கியபோது, யாரோ ஒருவன் வந்து அவனுடைய அறையை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது