பக்கம்:பாலும் பாவையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 'தன்னம்பிக்கை வேண்டிய மட்டும் இருக்கத்தான் இருக்கிறது. இருந்தாலும்.” “என்ன இருந்தாலும்..?” ‘ரயில் வேக் காரன் டிக் கெட்டுக்குக் காசைக் கேட்டுத் தொலைக்கிறானே....?” "பயப்படாதே, நீ கொண்டு போகும் புத்தகங்கள் அதற்கு வேண்டிய காசைக் கொடுக்கும். தினசரி உன்னுடைய செலவுக்கு நீ இரண்டு ருபாய் எடுத்துக் கொள்; அங்கிருந்து திரும்பி வருவதற்கும் ஒரு பத்து ரூபாய் எடுத்துக் கொள். பாக்கியை என்னிடம் கொண்டுவந்து கொடுத்தால் போதும்.” o கனகலிங்கம் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “சரி, கடவுள் துணை:- போனதும் அங்கே நான் ஏதாவது ஒரு ஹோட்டலில்தானே தங்கவேண்டும்? அதற்கு முன் பணமாக ஏதாவது...?” என்று இழுத்தான். “கொடுக்க வேண்டியதுதான்!” என்று சொல்லிக்கொண்டே பரமசிவம் இன்னும் ஒரு ஐந்து ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு, “போதுமா?” என்று கேட்டார். "போதும், போதும்!” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் கனகலிங்கம். அவன் சென்ற பிறகு பரமசிவம், கனகலிங்கம் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான்!- தன்னம்பிக்கை கூடச் சட்டைப்பையில் கச்சிருந்தால்தானே வந்து தொலைகிறது!’ என்று அக்கம் பக்கம் பார்த்துத் தமக்குத் தாமே இரகசியமாகச் சொல்லிக் கொண்டார்! 米米※※※※※