பக்கம்:பாலும் பாவையும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 எழுப்புகிறார்கள் போலிருக்கிறது!-களுக் கென்று சிரித்துக்கொண்டே எழுந்தாள்-யாரையும் காணவில்லை. 'இது என்ன வேடிக்கை!" என்று அவள் ஏமாற்றத்துடன் எதிரேயிருந்த சுவரைப் பார்த்தாள். அங்கே மாட்டியிருந்த கனகலிங்கத்தின் போட்டோ’ அவளைப் பார்த்துக் குலுங்கச் சிரிப்பது போலிருந்தது! ”ரொம்பப் பொல்லாதவராச்சே, நீங்கள்!-உண்மையாகவே நீங்கள் வந்திருந்தாற்கூட என்னைக் கையினால் தொட்டா எழுப்பியிருப்பீர்கள்? பேனாவினால்தான். தொட்டு எழுப்பியிருப்பீர்கள்!” என்று சொல்லிக் கொண்டே எழுந்து சென்று, அகல்யா அந்தப் போட்டோ'வின் கன்னத்தில் சிரித்துக் கொண்டே ஓர் இடி இடித்தாள். அவ்வுளவுதான்; அந்தப் படம் ஆணியோடு கழன்று கீழே விழுந்து 'கல் லென்று உடைந்தது. அத்துடன் i அவள் சிரிப்பும் இருந்த இடம் தெரியாமல் பறந்தது: 'ஐயோ!' என்று திறந்த வாயை மூடாமல், அவள் தன் இதயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு கீழே உட்கார்ந்தாள். அவளுடைய கைகள் அந்தப் படத்தைத் தொடும்போது வெடவெட வென்று நடுங்கின; இதழ்கள் துடிதுடி யென்று துடித்தன. கண்களில் நீர் மல்க அந்தப் படத்தை அவள் ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள் மறு வினாடி தன்னையும் அறியாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்து அவள் ஒன்றோடு ஒன்றை ஒட்டவைக்க முயன்றாள்-முடியவில்லை! 'மரணத்துக்குப் பிறகு மனிதனின் உயிரும் உடலும் கூட இப்படித்தான் ஆகிவிடுகின்றன என்று தனக்குள் சொல்லிக்