பக்கம்:பாலும் பாவையும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கொண்டே சென்று, அந்தக் கண்ணாடித் துண்டுகளை வெளியே விட்டெறிந்துவிட்டு வந்தாள் வந்ததும் என்ன நினைத்துக் கொண்டாளோ என்னமோ, 'உங்களுடைய உள்ளமும் உடலும் என்னைத் தீண்டா விட்டாலும் உங்கள் படமாவது என்னைத் தீண்டட்டும்’ என்று அந்தப் படத்தை எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டு, அவள் ஆனந்தக் கண்ணிர் உகுத்தாள். அதற்குப் பிறகு, நீர் நிறைந்த அவளுடைய கண்கள் அடிக்கடி மாடிப் படிகளை நோக்கின-அவன் வரவில்லை-ஆம், அவன் வரவேயில்லை. இந்தச் சமயத்தில் இன்னொரு பயங்கரமான எண்ணம் அவளுடைய உள்ளத்தில் எழுந்தது அதன் காரணமாக நிலைத்த கண் நிலைத்தபடி அவள் வெகு நேரம் தன்னுடைய காலின் கட்டை விரலையே பார்த்துக் கொண்டிருந்தாள் பிறகு சீச்சீ! அந்த உத்தமருக்கு அப்படி யெல்லாம் ஒன்றும் நேர்ந்திராது!’ என்று அவள் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அடுத்த கணம் அவள் முகம் மலர்ந்தது. ஆனால் அந்த மலர்ச்சி நீடிக்கவில்லை. ‘ஒரு வேளை இன்றிரவு அவர் வராமலே இருந்து விட்டால்...? இப்படி நினைத்ததும் அவள் முகம் குவிந்தது. கையில் கனகலிங்கத்தின் படத்துடன் கைப்பிடிச் சுவருக்கு அருகே வந்து நின்று, கண்களுக் கெட்டிய தூரம் வரை அவள் சாலையைப் பார்த்தாள்; ஆள் நடமாட்டமே இல்லை 'இரவு முழுவதும் இங்கே நாம் எப்படித் தனியாயிருக்க முடியும் ? அகல்யா திரும்பி வந்து நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள் மாடிக் கதவை யாரோ தடதட வென்று தட்டுவது போலிருந்தது படததை மேஜையின்மேல் வைத்துவிட்டு