பக்கம்:பாலும் பாவையும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 ஒடோடியும் சென்று கதவைத் திறந்தாள்-ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம்; அங்கே யாரையும் காணவே யில்லை! மறுபடியும் அவள் உள்ளே வந்து உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கினாள். 'நண்பர் ராதாமணியுடன் எங்கேயாவது போயிருப்பாரோ?இருந்தாலும் இருக்கும்; பொழுது விடிந்தால்தான் எல்லா விவரமும் தெரியும் போலிருக்கிறது!’ அகல்யா, கனகலிங்கத்தின் படத்தைத் தலைமாட்டில் வைத்துக்கொண்டு மீண்டும் படுததாள். அவள் விளக்கை அணைக்கவில்லை, எரியும் விளக்கைப் பார்த்தபடி விழித்துக் கொண்டிருந்தாள். அடுத்த வீட்டுக் கடிகாரம் மணி பன்னிரண்டு அடிக்கும் சத்தம் கேட்டது. 'அந்தக் கடிகாரத்தைப் போலவே நாமும் இன்று பொழுது விடியும் வரை விழித்துக்கொணடிருக்க வேண்டியதுதானா..? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை; அப்படியும் இப்படியுமாகப் புரண்டு புரண்டு படுத்தாள் கீழே ஏதோ ஒரு கார் வாயுவேகததில் சீறிக் கொண்டு செல்லும் சத்தம் கேட்டது. 'மனிதனின் அமைதியான வாழ்க்கையைக் குலைக்கும் சாதனங்களில் இதுவும் ஒன்று; மடையனுக்குக் கூட நாலுபேருக்கு முன்னால் மதிப்பைச் சம்பாதித்துக் கொடுத்துவிடும் அபூர்வ சக்தி இதனிடம் இருக்கிறது. அது மட்டுமல்ல; மூடர்கள் உலகத்தை ஏமாற்றுவதற்கு இதை ஒரு கருவியாகவும் உபயோகித்துக் கொள்கிறார்கள்!' என்று தனக்குள் வெறுப்புடன் சொல்லிக் கொண்டே அகல்யா எழுந்து உட்கார்ந்தாள் அந்தச் சத்தத்தைத் தொடர்ந்து வாள் வாள், வாள் வாள' என்று ஒரு நாய் தீனக் குரலில் வாய் விட்டுக் கதறும் சத்தம் அவள காதில் விழுந்தது. 'பாவம், சாலையோரத்தில் உறங்கிக் கொணடிருந்த நாயை அந்தக் கார் கொன்று விட்டது போலிருக்கிறது. இப்படித்தான்