பக்கம்:பாலும் பாவையும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'೭-iia675 காதலிக்காமல் கொல்வதைவிடக் காதலித்தே கொன்று விடுகிறேன், உன் னைக் காதலி க்காமல் கொல்வதைவிடக் காதலித்தே கொன்றுவிடுகிறேன், உன்னைக் காதலிக்காமல் கொல்வதை விடக் காதலித்தே கொன்றுவிடுகிறேன்.' - பழைய நினைவுகளில் லயித்துச் சென்றுகொண்டிருந்த அகல்யாவின் காதில் கனகலிங்கம் அன்று சொன்ன அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒலித்தன ‘ஆம்! அன்று நீங்கள்தான் என்னைக் காதலித்துக் கொல்வதாகச் சொன்னீர்கள் ஆனால் இன்றோ நான் உங்களைக் காதலித்துக் கொன்றுவிட்டேன்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவள் நடந்தாள் ‘எங்கே போவது?’ என்ற பிரச்சனை அவளுடைய உள்ளத்தில் திடீரென்று எழுந்தது 'அவருக்குப் பிறகு-அந்த உத்தமருக்குப் பிறகு-இந்தப் பரந்த உலகத்தில் நம்மை ஆதரிக்க-நம்மிடம் இரக்கங்காடட-வேறு யார் இருக்கிறார்கள்?’ என்று அவள் ஒருகணம் யோசித்தாள்: மறுகணம், இல்லை; யாரும் இல்லை' என்ற தீர்மானத்துடன் அவள் மேலே நடந்தாள். 'அப்படியானால் இனி தனக்குச் சாவதைத் தவிர வேறு வழியே கிடையாதா?’ சிறிது தூரம் சென்றதும் இந்தக் கேள்வியைக் தனக்குத் தானே கேடடுக்கொண்டு அவள் நின்றாள