பக்கம்:பாலும் பாவையும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 அவளால் மேலே செல்ல முடியவில்லை; அந்தத் திண்ணையில் சாய்ந்தபடி நின்றுவிட்டாள். உள்ளே தன் அப்பாவும் சித்தப்பாவும் இரகசியமாக ஏதோ பேசிக்கொண்டிருப்பது அவள் காதில் விழுந்தது. ‘என்ன பேசுகிறார்கள்?’ என்று தெரிந்து கொள்வதற்காக சுவரோடு நின்று ஒட்டுக் கேட்டாள். "அண்ணா! அந்தப் பயலைத் தொலைத்துவிட்டேன்!” என்றார் அவளுடைய சித்தப்பா. அகல்யாவுக்குத் துக்கிவாரிப் போட்டது எந்தப் பயலை.? என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு, அவள் விழித்தது விழித்தபடி நின்றாள். "உண்மையாகவா!” என்று கேட்டார் அவளுடைய அப்பா. "ஆமாம்; அதிலும் எப்படித் தொலைத்தேன், தெரியுமா? எதிர்பாராத விதத்தில் நேர்ந்த மரணம் என்று போலீஸார் உட்பட எல்லோரும் நினைக்கும் படி ஆ ைள வேலை தீர்த்துவிட்டேன்......!” 'அட, பாவி!” என்று அகல்யா முணுமுணுத்தாள். அதற்குள், "ஐயோ, பாவம்!” என்றார் அவளுடைய அப்பா. "பாவமாவது, புண்ணியமாவது! அதற்காக “டாக்ஸி’ டிரைவரிடம் முழுசாக ஆயிரம் ரூபாயல்லவா எண்ணிக் கொடுத்தேன்? இல்லையென்றால் சமயம் பார்த்து அவன் காரை அந்தப் பயலின் மேலே ஏற்றியிருப்பானா, என்ன? போதாக் குறைக்கு அவன் அதற்காகச் சிறைக்குச் செல்ல நேர்ந்தாலும், அதுவரை அவனுடைய குடும்பத்தை வேறு காப்பாற்றுவதாகச் சொல்லியிருக்கிறேன்?” என்றார் சித்தப்பா “அது சரி, அவனை டிரைவருக்கு எப்படுத தெரிந்தது?" என்று கேட்டார் அவளுடைய அப்பா. "நான் அந்தப் பயலின் விலாசத்தைக் கொடுத்தேன்