பக்கம்:பாலும் பாவையும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 அவனுக்குப் பெயர்?” என்று வாயைப் பிளந்தார் அவர். “என்ன, என்ன..!" என்று குழறினார் இவர். அகல்யாவின் தலை சுழன்றது. "அமாம்; இது அக்கிரமத்திலும் அக்கிரமமாகவல்லவா இருக்கிறது” என்றார் அவளுடைய அப்பா. "நான் அகல்யாவோடு அந்தப் பயலை நேருக்கு நேராகப் பார்த்தேனே!” என்றார் அவள் சித்தப்பா. “என்னமோ, போ!-எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய அப்பா நாற்காலியை இழுத்து விட்டுவிட்டு எழுந்தார். அதற்குப் பிறகு அவர்களுடைய பேச்சுக் குரல் கேட்கவில்லை; இருவரும் திருடனைத் தேள் கொட்டியது போல் மெளனமாக இருந்துவிட்டார்கள். 'அட, பாவிகளா! நான் அப்பொழுதே நினைத்தேன்நீங்கள்தான் அந்தக் கொலை காரண அனுப்பியிருப் பீர்களென்று- நீங்கள் நாசமாய்ப் புேக!” அகல்யாவுக்கு இப்பொழுது 'அம் மாவு மாச்சு, அப்பாவுமாச்சு!" என்று அலுத்துவிட்டது. அவள் விரக்தியுடன் வந்த வழியே திரும்பினாள். ஆனால் மனத்திலிருந்த பாரம் அவளை நடக்க விடவில்லை; ஒவ்வொரு அடியையும் அவள் வெகு சிரமப்பட்டு எடுத்து வைக்க வேண்டியிருந்தது. இந்த அழகில் தெருவோடு இருந்த படிகளைக் கடக்கும்போது, அவள் முதல் படியிலிருந்து இரண்டாம் படியில் காலை வைப்பதற்குப் பதிலாக மூன்றாம் படியில் காலை வைத்துவிட்டாள் அவ்வளவுதான்; 'தடால் என்று கீழே விழுந்துவிட்டாள். அதே சமயத்தில் தன்னை மறந்து வந்து கொண்டிருந்த யாரோ ஒருவன் அவள் மேல் இடறி விழுந்தான். "ஐயோ!' என்று அகல்யா முனகினாள்