பக்கம்:பாலும் பாவையும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 “மன்னியுங்கள்!” என்று பல்லை இளித்துக்கொண்டே அவன் எழுந்து நின்றான். அகல்யா தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள்-என்ன ஆச்சரியம்! அவளுக்கு எதிரே ரிஷி பத்தினியான அகல்யாவின் சாபத்தைப் போக்கவந்த பூரீராமனைப்போலத் தசரத குமாரன் கையில் கோதண்டமின்றி, பக்கத்தில் லக்ஷ்மணன் இன்றி நின்று கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளியே காட்டிக்கொள்ளாமல், “நீங்களா!” என்றாள், அவள் தலையைக் கீழே குனிந்து கொண்டே. "ஆமாம்; நான்தான்!” என்று சொல்லிக் கொண்டே தசரதகுமாரன் முதன்முறையாகத் துணிந்து அவளைக் கை கொடுத்துத் தூக்கினான். இருவரும் தனிமையை நாடிக் கடற்கரைக்குச் சென்றார்கள் 率 水 :k “Tெல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். அகல்யா!-அந்தப் படுபாவி உன்னைக் கலைஞானபுரத்தில் தன்னளந் தனியாக விட்டு விட்டுச் சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டானாமே?வந்த பிறகு, ‘இனி என்னை எதிர்பார்க்க வேண்டாம் என்று அவன் உனக்கு ஒரு கடிதம் வேறு எழுதிப் போட்டானாம். அப்புறம் அந்தக் கடிதத்தைக் கொண்டு நீ எங்கே போலீஸ் நடவடிக்கை எடுத்துவிடப் போகிறாயோ என்று அவனுக்குப் பயமாயிருந்ததாம். அதற்காக மழையில் நனைந்துகொண்டு ஒருநாள் அவன் உன்னைத் தேடி ஹோட்டல் அறைக்கு வந்தானாம். நீ அப்போது வேறு யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தாயாம். அந்த ஆசாமி, இந்திரன் உனக்கு எழுதிய கடிதத்தை என்னிடம் கொடு!" என்று உன்னைக் கேட்டானாம் அதைக் கிழித்து எறிந்துவிட்டேன்’ என்று நீ சொன்னாயாம். அதற்குப் பிறகுதான் அவன் மன நிம்மதியுடன்