194 ஏற்கெனவே தனக்கு நிச்சயமாகியிருந்த ஒரு பணக்காரன் வீட்டுப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டானாமே! என்று ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னான் தசரதகுமாரன். அகல்யா மெளனமாக இருந்தாள். "யார் கைவிட்டாலும் நான் உன்னைக் கைவிடமாட்டேன், அகல்யா!” என்று சொல்லிக்கொண்டே, அவன் அவளுடைய கரத்தை மெள்ளப் பற்றினான். அவனுடைய பிடியிலிருந்து கரத்தை விடுவித்துக் கொள்ள அவள் விரும்பவில்லை; பேசாமலிருந்தாள் "நீ என்னுடைய உயிர்; நான் உன்னுடைய உடல்-நம்மை இனி யாராலும் பிரிக்க முடியாது!” என்று சொல்லிக்கொண்டே, அவளை அணைத்தான். அவள் 'முடியும்’ என்றும் சொல்லவில்லை; முடியாது’ என்றும் சொல்லவில்லை - மெளனமாக இருந்தாள் "நான் உன்மீது கொண்ட காதல் உடலோடு ஒட்டிய காதல் அல்ல; உயிரோடு ஒன்றிய காதல். அதுவே உயர்ந்த காதல் என்றும், உண்மைக் காதல் என்றும் தெரிந்தவர்கள் சொல்வார்கள். அகல்யா!-அந்தக் காதல், பூமி பிளந்தாலும் சரி, ஆகாயம் கீழே விழுந்தாலும் சரி-எதற்கும் பின்வாங்காது!” அவள் வாங்கும்’ என்றும் சொல்லவில்லை 'வாங்காது’ என்றும் சொல்லவில்லை-பேசாமலிருந்தாள். "உனக்கு விஷயம் தெரியாது நான் பழைய தசரத குமாரன் அல்ல; புதிய தசரதகுமாரன்-என் அண்ணாவுக்கும் எனக்கும் இப்பொழுது பாகப் பிரிவினையாகிவிட்டது வீட்டில் நானும் சமையற்காரனும்தான் இருக்கிறோம் எனவே, எந்தவிதமான இடைஞ்சலுமின்றி நாம் இருவரும் 'ஜாம், ஜாம்' என்று கல்யாணம் செய்துகொள்ளலாம் அப்புறம் சிட்டுக குருவியைப் போலவும் வானம்பாடியைப் போலவும் திரியலாம், பறக்கலாம்
பக்கம்:பாலும் பாவையும்.pdf/197
தோற்றம்