பக்கம்:பாலும் பாவையும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 அதுமட்டுமா நீ குயில்; பாடுவாய்!-நான் மயில்: ஆடுவேன்!என்ன, சம்மதம்தானே..?” அவள் சம்மதம்’ என்றும் சொல்லவில்லை, சம்மத மில்லை என்றும் சொல்லவில்லை-மெளனமாக இருந்தாள். “என்னுடைய பாக்கியமே பாக்கியம்!-நான் சாப்பிட்டுவிட்டு ஒரு நண்பனைப் பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தேன். வழியில் கைதவறிப் போட்டுவிட்ட மாணிக்கத்தைப்போல நீ கிடைத்தாய்!-என் மகிழ்ச்சிக்குக் கேட்க வேண்டுமா?என்னுடைய நெடுநாளைய கனவு இன்றுதான் நனவாயிற்று. இனி நான் பொறுக்க மாட்டேன், ஆமாம், பொறுக்கவே மாட்டேன்!வா அகல்யா, வா!-எழுந்து வா!' 教 அவன் அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான். அவள் பேசாமல் எழுந்து பின்னால் சென்றாள். அவளுடன் தோளோடு தோள் சேர்த்துச் செல்லும் போது தசரதகுமாரனுக்குப் பூமியில் நடப்பது போலவே இல்லை; ஆகாயத்தில் பறப்பதுபோல இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரம் சென்றதும் அவனுக்குப் பின்னால் யாரோ இருவர் 'கொல்'லென்று கைகொட்டிச் சிரிக்கும் சத் தம் கேட்டது: அதைப் பொருட்படுத்தாமல் அவன் மேலே நடந்தான். இன்னும் சிறிது தூரம் சென்றதும், அதோ, அவனுடன போகிறாள். பார்!-அவளைத் தான் முதலில் இந்திரன் அழைத்துக்கொண்டு போனான். அப்புறம் அவன் அவளை