197 “என்ன?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் தசரதகுமாரன், “ரொம்ப நேரங் கழித்து வந்திருக்கிறீர்களே!பால் கெட்டுப் போய்விட்டதே!” என்று சொல்லிக்கொண்டே, பால் சொம்பை அவனுக்கு எதிரே நீட்டினான் לל “சரி, கெட்டுப் போன பாலை என்ன செய்யப் போகிறாய்? சமையற்காரன் சிரித்தான். சிரித்துவிட்டு, “என்ன ஸார் இது?-'கெட்டுப்போன பாலை என்ன செய்யப் போகிறாய்? என்று காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கேட்கிற மாதிரி கேட்கிறீர்களே!எங்கேயாவது கெட்டபால் நல்ல பாலாகுமா, ஸார்?-எடுத்துச் சாக்கடையிலே ஊற்ற வேண்டியதுதானே!” என்றான். இதைக் கேட்டதும் தசரதகுமாரனுக்குச் சுருக்கென்றது. “சரி, போ!' என்று அவன் சமையற்காரனை விரட்டிவிட்டு, அகல்யாவின் முகத்தை ஊடுருவிப்பார்த்தான்; அவளும் அவன் முகத்தைப் பார்த்தாள் அவ்வளவுதான்; அவனுடைய இதயம் இரும்பாயிற்று. 'சட்டென்று அவன் அகல்யாவின் கரத்தைப் பிடித்தான்; கரகரவென்று இழுத்துக் கொண்டு போய் அவளை வெளியே விட்டுவிட்டுக் கதவைப் பட்டென்று சாத்திக்கொண்டு உள்ளே வந்தான். அகல்யாவின் விஷயம் புரிய வெகு நேரம் ஆகவில்லை. புரிந்ததும், அட கடவுளே! பாலும் பாவையும் ஒன்றென்று எண்ணியா என்னை நீ படைத்தாய்?’ என்று எண்ணி, அவள் நெட்டுயிர்த்தாள். அடுத்த கணம் யார் இடம் அளிக்காவிட்டாலும் இந்த உலகத்தை விட இரண்டு பங்கு பெரிதான கடல் கூடவா நமக்கு இடம் ரிக்காது?’ என்ற எண்ணம் அவள் உள்ள்த்தில் பளிச்சிட்டது. அதற்கு மேல் அவள் அங்கே நிற்கவில்லை; நிதானிக்கவில்லை; எதையும் யாரையும் திரும்பிக் கூடப்
பக்கம்:பாலும் பாவையும்.pdf/200
தோற்றம்